சென்னை: அதிமுக கூட்டணியில் கடந்த 23ம் தேதி தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பாஜ, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ஜி.கே.வாசன் மற்றும் சிறிய கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எந்தெந்த தொகுதிகள் என்றும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை 4 மணிக்கு சென்னை மந்தைவெளியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்கிடையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி செய்து வருகிறது.
