×

சிலிண்டர் தடையின்றி விநியோகம் என பிரதமர் கூறுவது பொய்: இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: காஸ் சிலிண்டர், உரம் தடையின்றி விநியோகிப்பதாக பிரதமர் கூறுவது உண்மைக்கு மாறானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் காஸ் சிலிண்டர், உரம் சீராக விநியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறானாது. நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் மக்கள் விறகு அடுப்பிற்கு மாறி வருகின்றனர். வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேநீர் நிலையங்கள், உணவங்கள் மூடப்பட்டுள்ளன. உரம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக உண்மைக்கு மாறான தகவலை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். பிரதமரின் உண்மைக்கு மாறான உரை கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Indian Communist Party ,Chennai ,Communist Party of India ,Parliament ,Modi ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...