×

கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் அதிரடி கைது வேலூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்

வேலூர், மார்ச் 25: வேலூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த சம்பங்கிநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(35), கூலித்தொழிலாளி. அவரது மனைவி ஜெயந்தி(29). தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு பிரபுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் பிரபுவை, அவரது மனைவி ஜெயந்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனையில் பிரபுவின் உடலில் காயங்கள் இருப்பதால், சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள், போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவின் மனைவி ஜெயந்தி மற்றும் சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ‘கொலை செய்யப்பட்ட பிரபுவின் தம்பி சரவணனுக்கும், ஜெயந்திக்கும் கடந்த ஓராண்டுக்கு மேலாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த பிரபு, ஜெயந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிரபுவை கொலை செய்ய ஜெயந்தி திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி கடந்த 21ம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபுவை ஜெயந்தியும், சரவணனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் சந்தேகம் வராமல் இருக்க மருத்துவமனைக்கு எடுத்து சென்று நாடகமாடியதும் தெரியவந்தது. பிரேத பரிசோதனையில், காயங்கள் இருப்பது தெரியவந்ததால் பிரபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் இந்த கொலை தெரியாமல் இருக்க ஜெயந்தி பிரபுவை மருத்துவமனைக்கு எடுத்து சென்று நாடகமாடி உள்ளார். இதையடுத்து ஜெயந்தி மற்றும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

Tags : Vellore ,Prabhu ,Sambanginallur ,Jayanthi ,
× RELATED 102 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய...