×

செல்போனில் மாணவிகள் போட்டோ ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்த பள்ளி முதல்வர் கைது

 

திருவனந்தபுரம், மார்ச் 24: குன்னம்குளத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோக்களை செல்போனில் வைத்திருந்த பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எர்ணாகுளம் அருகே உள்ள சிற்றிலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சஜு வர்கீஸ் (48). இவர் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படிப்பு தேவைகளுக்காக இவர் தன்னுடைய செல்போனை பிளஸ் 2 மாணவிகளுக்கு கொடுத்திருந்தார். அப்போது அந்த போனில் தங்களுடைய ஆபாச போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் இதுகுறித்து மற்ற ஆசிரியர்களிடம் கூறினர். இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இது தொடர்பாக குன்னம்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், முதல்வர் சஜு வர்கீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvananthapuram ,Kunnamkulam ,Saju Varghese ,Chittilappally ,Ernakulam… ,
× RELATED திம்பட்டி கிராம விவசாயிகளுக்கு...