×

கூடலூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்

 

கூடலூர், மார்ச் 23: கூடலூர் அருகே கிளன்வன்ஸ் திருவள்ளுவர் நகர்  முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட கிளன்வன்ஸ் திருவள்ளுவர் நகர்  முத்துமாரியம்மன் கோயில் ஏழாம் ஆண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம், பறவை காவடி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடி எடுத்து வந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். சிறப்பு அலங்கார அபிஷேகம் மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.
மூன்றாம் நாளான நேற்று மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடைந்தது. இதனையடுத்து இரவில் சேரன் நகர் ஆற்றங்கரையில் அம்மன் குடிவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Muthumariamman temple festival ,Gudalur ,Clanvans Thiruvalluvar Nagar ,Clanvans ,Thiruvalluvar ,Nagar ,Muthumariamman ,Ovely Panchayat ,
× RELATED வீர ராசேந்திரன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு