×

பரம்பிக்குளம் வனப்பகுதியில் வறட்சி வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க தடுப்பணை

 

பாலக்காடு, மார்ச் 23: பரம்பிக்குளத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடுமையான வறட்சியின் காரணமாக காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, மான்கள், குரங்குகள் மற்றும் பறவையினங்கள் குடிநீர் தேடி ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இந்நிலையில் பரம்பிக்குளம் அருகே குரியார்க்குற்றி பகுதியில் வன விலங்குகளுக்காக குடிநீர் தொட்டிகள் மற்றும் வனச்சோலை இடங்களில் சிறிய அளவிலான தடுப்பணை அமைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை வனத்துறை உதவி இயக்குநர் நிதீஷ்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வன விலங்குகளுக்கு குடிநீர் மற்றும் பாதுகாப்புகள் வழங்குவது குறித்து பரம்பிக்குளம் வாழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய இயற்கை சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருவாயூரப்பன், இக்கோ மேம்பாட்டுக்குழு செயலாளர் ரஜீஷ், பீட் பாரஸ்ட் அதிகாரி நீது, நாராயணசாமி, பிரவீண், சேதுமாதவன், இ.டி.சி உறுப்பினர்களான சுகந்தி, பாலமுருகன், முத்தான், மோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : Parambikulam ,Palakkad ,Parambikulam… ,
× RELATED வீர ராசேந்திரன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு