தங்கம் விலையில் ஒரே நாளில் 3 முறை மாற்றம் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து மாலையில் ரூ.5,360 உயர்ந்தது: போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான மறுநிமிடமே எகிறியது

 

சென்னை: தங்கம் விலை நேற்று காலை, பிற்பகல் என பவுனுக்கு ரூ.7600 குறைந்த நிலையில், மாலையில் தங்கம் விலை திடீரென பவுனுக்கு ரூ.5360 உயர்ந்தது. போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான மறுநிமிடமே விலை அதிரடியாக எகிறி உள்ளது. தங்கம் விலை ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்ததது. அதுவும் காலை, மாலை என உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலையில் ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைய தொடங்கியது. தொடர்ந்து ஒரு வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,760 வரை குறைந்தது. இந்த நிலையில் 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. 21ம் தேதி மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கும், பவுனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,960க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதாவது நேற்று காலையில் கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950க்கும், பவுனுக்கு ரூ.5,360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 3,600க்கும் விற்றது. அதே போல வெள்ளி விலையும் நேற்று காலையில் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று பிற்பகலிலும் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. நேற்று பிற்பகலில் கிராமுக்கு ரூ.280 குறைந்து ஒரு கிராம் ரூ.12,670க்கும், பவுனுக்கு ரூ.2,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு பவுனுக்கு ரூ.7,600 குறைந்தது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று மாலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையே நடந்து வந்த போர் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் திடீரென அறிவித்தார். போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நிமிடமே, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3வது முறையாக தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது நேற்று மாலை 5.30 மணியளவில் தங்கம் விலை உயர்ந்ததை பார்க்க முடிந்தது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.670 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,340க்கும், பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்து ஒரு பவுன் 1 லட்சத்து 6,720க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றம் நகை வாங்குவோரை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.

 

Related Stories: