×

புதுச்சேரி காமராஜ் நகரில் போட்டியிடும் லாட்டரி அதிபர் மகனுக்கு ரூ.597 கோடி சொத்து: l17.5 கிலோ தங்க நகைகள், ரூ.44 கோடிக்கு வைரம்; ரூ.210 கோடி கடன்; வேட்பு மனுவில் தகவல்

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேஜ கூட்டணியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகரில் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் தனது சொத்துமதிப்பு குறித்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் பெயரில் அசையும் சொத்து ரூ.328 கோடியும், அசையா சொத்து ரூ.269 கோடி என ரூ. 597 கோடிக்கு சொத்துகளும், வங்கி கடனாக ரூ.210 கோடியும் உள்ளது. மேலும், அவரது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.10.61 கோடியும், அசையா சொத்து ரூ.60 லட்சமும் உள்ளது.

கையிருப்பாக ரூ.20.59 லட்சம் பணமும், ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.1.29 கோடி மதிப்புள்ள கார், ரூ.25.67 கோடி மதிப்புள்ள 17.5 கிலோ தங்கம், ரூ.44.87 கோடி மதிப்புள்ள வைரம், ரூ.3.77 கோடி மதிப்புள்ள வெள்ளியும், ரூ.38.53 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரமும், ரூ.1.57 லட்சம் மதிப்புள்ள முத்துக்களும் உள்ளது. கோயம்புத்தூரில் ரூ.25 கோடி மதிப்புள்ள 24.4175 ஏக்கர் நிலமும், உப்பிலிபாளையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.1275 ஏக்கர் நிலமும், செங்கல்பட்டில் ரூ.40 கோடி மதிப்புள்ள 17.23 ஏக்கர் நிலமும், காளப்பட்டி பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள 2.80 ஏக்கர் நிலமும், சங்கனூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 0.125 ஏக்கர், சென்னை கிண்டியில் ரூ.52 கோடி மதிப்பில் 0.351 ஏக்கர் நிலமும், பேரூரில் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 ஏக்கர் நிலமும், சொக்கம்புதூர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 0.3250 ஏக்கர் நிலமும், தெலுங்குபாளையம் பகுதியில் ரூ.30 கோடி மதிப்புள்ள 6.61 ஏக்கர் நிலமும் மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள் 1.3825 ஏக்கர் நிலமும், வெள்ளக்கிணறு பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள 0.328 ஏக்கர் நிலமும் உள்ளது.

சங்கனூர் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்புள்ள குடியிருப்பு, லண்டனில் ரூ.6.64 மதிப்புள்ள குடியிருப்பு, துபாயில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள குடியிருப்பு, கோயம்புத்தூரில் ரூ.2 கோடி மதிப்புள்ள குடியிருப்பு, சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.50 கோடி மதிப்புள்ள குடியிருப்பு, பெங்களூரில் ரூ.7.99 கோடி மதிப்புள்ள 5 அடுக்குமாடி குடியிருப்பு, தெலுங்குபாளையத்தில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள குடியிருப்பு, வெள்ளகிணறு பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள குடியிருப்பும் உள்ளது என தெரிவித்து உள்ளார்

* 3 லாட்டரி மோசடி வழக்கு 2 ஈடி வழக்கு
ஜோஸ் சார்லஸ் தனது வேட்புமனுவில், அருணாச்சல் பிரதேசம், கோவா, நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் 4.53 சதவீதம் பங்குகளும் மற்றும் மத்திய ரயில்வே துறையில் பாரத் கவுரவ் ரயிலில் 80 சதவீதம் பங்குகளும் உள்ளது. தன் மீது மேற்கு வங்கத்தில் 3 லாட்டரி மோசடி வழக்குகளும், எர்ணாகுளத்தில் அமலாக்கத்துறை என 5 வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

* வேல் பிடித்து பிரசாரத்தை தொடங்கிய சீமான்: முருகனை நம்பிட்டோம் எங்களுக்கு தோல்வியே கிடையாது என பேச்சு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தேர்தல் பிரசாரத்தை திருத்தணியில் நேற்று தொடங்கினார். முன்னதாக சரவணப்பொய்கை திருக்குளத்தில் இருந்து வேல் சுமந்தபடி திருப்படிகள் வழியாக மலைக் கோயிலுக்கு குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் வந்து சீமான் சாமி தரிசனம் செய்தார்.

மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்வதை புகைப்படம் வீடியோ பதிவு செய்ய தடை இருந்தாலும், நாதகவினர் சீமான் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்வதை வீடியோ எடுத்து அக்கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பின்னர், வேல் பிடித்தவாறு முருகன் பக்தி பாடல் பாடி தனது பிரசாரத்தை தொடங்கினார். திருத்தணி தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் சந்திரனை ஆதரித்து அவர் பேசுகையில், ‘‘முருகனின் வேலாயுதத்தை நம்பி தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். எங்களுக்கு தோல்வியே கிடையாது. தேர்தல் என்ற போர்க்களத்தில் வெற்றி தான் எங்களின் இலக்கு. வேண்டும்’’ என்றார்.

Tags : Kamaraj Nagar ,Puducherry ,Martin ,Lakshya Janama Party ,Teja ,Jose Charles Martin ,
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு...