திண்டுக்கல், மார்ச் 23: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏதுவாக படிவம் 12- Dஐ வழங்கி வாக்காளர்களின் சம்மதம் பெற இன்று முதல் வாக்காளர்களின் இல்லம் தேடி சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
