ராஜபாளையம், மார்ச் 23: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன் முன்னிலையில் நடந்த பேரணியில் உதவி திட்ட இயக்குநர் தர்மராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). வீரலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ). செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதுபோன்று வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி பகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை உதவியாளர்கள் 100% வாக்குப்பதிவு மற்றும் என் வாக்கு என் உரிமை, என் வாக்கு விற்பனைக்கு இல்லை என விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில் வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி, கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜன் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
