×

ஆவடி காவல் ஆணையர் தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி

 

ஆவடி, மார்ச் 23: தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆவடி காவல் ஆணையாளர் தலைமையில் காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையரகத்தில் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.எம்.நகர் கன்வெர்ஷன் சென்டரில் ஆவடி காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த்சின்ஹா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் இணை ஆணையாளர், துணை ஆணையாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில் காவல் அதிகாரிகள் தேர்தல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், வாக்காளர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க ஏதுவான சூழலை உருவாக்குதல் குறித்தும், காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்சின்ஹா வழங்கினார்கள்.

Tags : Avadi Police ,Commissioner ,Avadi ,Avadi Police Commissioner ,Tamil Nadu Assembly ,Avadi Police Commissionerate ,
× RELATED பங்குனி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளில்...