சென்னை: வாக்குப் பதிவு நாளன்று வாக்கு சேகரிப்பு, தேர்தல் பணிகளை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளதால் வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு உரிமையை வழங்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் தகவல் ஆணையர் வழக்கறிஞர் எஸ்.முத்துராஜ் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு இக் கடிதத்தை எழுதியுள்ளார். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து வேட்பாளர்களுக்கும் தபால் வாக்குமூலம் வாக்குப்பதிவு செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
