×

மங்கள சின்னத்தின் சூட்சும ரகசியங்கள்

பகுதி 2

(சென்ற இதழ் தொடர்ச்சி…)

வாகன விபத்து ஏற்படாமல் இருக்க…

வாகனம் வைத்திருப்போர்தங்கள் வாகனத்தில் முன்பக்கம் அல்லது பின்புறங்களில் ஸ்வஸ்திக் ஸ்டிக்கரை ஒட்டி வைப்பதன் மூலம் விபத்துகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். பயணப் பாதுகாப்பிற்கு ஸ்வஸ்திக் சின்னம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவரவர்களுடைய அதிர்ஷ்ட நிறங்களில் ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.மேலும்சட்டைப் பையிலும் வைத்துக்கொள்ளலாம்.

ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவது எப்படி?

ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கென்று பிரத்யேகமான ஒருமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று கோடுகளை வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் கீழிருந்து மேலாக மற்ற மூன்று கோடுகளையும் வரைய வேண்டும். இந்த முறைப்படிதான் சகல இடத்திலும் ஸ்வஸ்திக் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.அதன் மூலம் அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பது ஐதீகம். அவ்வாறு வரையப்பட்ட சின்னத்தை வண்ணங்களால் அலங்கரிக்க விரும்பு பவர்கள் மஞ்சள் நிறத்தில் பட்டையான கோடுகளை வரைந்தபிறகு அவற்றின் மையப்பகுதிகளை குங்குமம் மூலம் பொட்டிட்டு அலங்கரிப்பது மங்கள சக்திகளை ஈர்ப்பதாக தாத்பரியம் உண்டு.

ஸ்வஸ்திக் சின்னத்தின் இரண்டு வகைகள்

ஸ்வஸ்திக் சின்னமானது வலப்புறச் சுற்று மற்றும் இடப்புறச்சுற்று ஆகிய இரண்டு நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக மங்களகரமானசக்திகளை ஈர்க்கக்கூடிய வலப்புறச்சுற்று அமைந்த (அதாவது கடிகார முள் சுற்றுவது போல) சின்னம்தான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

வலச்சுற்று ஸ்வஸ்திக் வளம் தரும்

அதற்கு மாறாக இடப்புறச்சுற்றாக (கடிகாரமுள் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக) பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னம் தீயசக்திகளை ஈர்க்கும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிச இயக்கத்தினர் பயன்படுத்தியது. இந்த ஸ்வஸ்திக் வகை சின்னத்தைத் தான். இது அழிவுக்கு சமம். ஆகவே ஸ்வஸ்திக் சின்னத்தை வரையும்போது கவனமாக இருப்பது அவசியம்.

Tags :
× RELATED இருதய ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகை