×

விஷக் கர்மதோஷம்!

‘கர்மம்’ என்ற சொல்லுக்கு ‘செயல்’ என்று பொருள். ‘தோஷம்’ என்ற சொல்லுக்கு ‘குறை’ என்றும், ‘அசுபத்தன்ைம’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், கிராமங்களின் சொல் வழக்கத்தில் ஒரு வீட்டில் நடைபெறும் அசுபகாரியத்தை கர்மம் என்றுதான் சொல்வார்கள். கர்மகாரகன் என்றால் செயலை எப்படியும் செய்ய வேண்டும் என்ற கட்டளைக்கு உட்படுத்து பவன் என்று பொருள். மானுடப் பிறப்பு என்பது கர்மத்தையும் புண்ணியத்தையும் அடிப்படையாகக் கொண்டது. பாரம்பரிய ஜோதிடத்தில் நம்முடைய இன்றைய நிலையானது சென்ற பிறவி எச்சத்தின் பிறவிப்பயன் என்றால் மிகையில்லை. அப்படிப்பட்ட நிலையில், என்றும் நிலையான ஒரு விஷயத்தை நாம் கைகொள்ளல் ஆகாது. சனியானது ‘கர்ம தோஷத்தை’ குறிக்காட்டும் என்பதை நாம் உணர்வோம். கர்ம தோஷத்தில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு ‘விஷக் கர்ம தோஷம்’ என்று பொருள். இந்த விஷக் கர்ம தோஷத்தின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

* கர்ம தோஷம் மற்றும் விஷக் கர்மதோஷம் என்றால் என்ன?

தர்மத்தின் அதிபதியான கிரகமானது ‘சனி’ ஆகும். இந்த சனி கிரகமானது ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்தாலோ அல்லது ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்தாலோ அதனை ‘கர்மதோஷம்’ என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்த கர்ம தோஷத்தின் அடுத்த கடுமையான பகுதியாக இந்த ‘விஷக் கர்மதோஷம்’ என்று ஒன்றுண்டு. ஜாதகத்தில் கேந்திரங்களாகிய (1,4,7,10) ஆகிய பாவகங்களில் ‘சனி’ சாயா கிரகமான ‘ராகு’ உடன் இணையப்பெற்றால் அது ‘விஷக் கர்ம தோஷம்’ என்று மாறுபடுகிறது.

விஷக் கர்மதோஷம் என்பதன் பலன் என்ன?

* நீண்ட நாட்களாக வீட்டில் உள்ள பிரச்னைகள் தீர்வாகாமல் மீண்டும் மீண்டும் பிரச்னைகள் அதிகமாகிக் கொண்டே செல்வது. அதற்கான தீர்வுகள் என்னவென்று தெரியாமல் குழப்பம் ஏற்படும்.
* சிலர் நமக்கு யாரோ ‘செய்வினை’ வைத்துவிட்டார்கள் என எங்கெங்கோ சென்று ஏராளமான பரிகாரங்கள் செய்வது.
* ஜாதகருக்கோ அல்லது ஜாதகரின் தாய் – தந்தைக்கோ அதிகமான உடன் பிறப்புகள் இருப்பார்கள். இந்த உடன் பிறப்புகள் எத்தனை பெரிய உத்யோகங்கள், அரசு பணியில் இருந்தாலும், முன்னேற்றம் அடையாத தன்மையில் சிலர் திடீரென மரணம் ஏற்படுவது.
* குலதெய்வக் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள். சிலருக்கு குலதெய்வம் என்ன வென்று தெரியாத சூழ்நிலைக்குள் அகப்பட்டிருப்பார்கள்.
* வீட்டில் சில குழந்தைகள் புத்தி சுவாதீனம் அற்ற நிலையிலும், சிலரால் சுயமாக இயங்க முடியாத சூழ்நிலைக்குள் இருக்க வேண்டியதாக இருக்கும்.
* சிலருக்கு கர்மதோஷம் பரிகாரம் என்று சென்றுவிட்டு அங்கு அவர்களுக்கு மரணம் அடையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகியிருக்கும்.
* இவர்களில் சிலர், கடவுளை வழிபட வேண்டும் என்ற சிந்தனையோ அல்லது இன்னும் ‘ஜோதிடம்’ மீது நம்பிக்கையோ இருக்காது எல்லாம் பொய் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை கடந்துச் செல்வார்கள்.
* வீட்டில் அதிகமான மாற்றுத் திருமணங்கள் மற்றும் அந்தத் திருமணத்தால் சில ேதாஷங்கள் உருவாகி வாழ முடியாத தன்மையில் வீட்டில் பெண்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
* சிலர் சட்டத்திற்கு புறம்பான செயல் களையும், மனோ தர்மத்திற்கான செயல்களையும் தொடர்ந்து செய்யக்கூடிய நிலையில் இருப்பார்கள்.
* வீட்டில் முன்னோர்களுக்கு தர்ப் பணம், சிரார்த்தம் போன்ற காரியங்களைச் செய்யாமல் இருப்பார்கள்.
* இவர்களின் வசிப்பிடமானதும் மற்றவர்களை சந்திக்கும் இடமும் அல்லது வேலைக்கு போகும் இடங்கள் அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் ஆள் அரவமற்ற இடமாகவும் இருக்கும்.
* சிலர் வீட்டில் சுபகாரியங்கள் நடந்திருந்தாலும் ‘விவாகரத்து’ போன்ற அமைப்புகளால் தொடர்ந்து தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
*இவர்களுக்கு மற்றவர்களைப் போல் நம்மாலும் ‘சந்தோஷமாக’ வாழ முடியவில்லையே என்ற மனக்குமுறல்கள் மனதிற்குள் இருந்து வருத்திக் கொண்டே இருக்கும்.
* சிலர் எப்பொழுதும் குடிக்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் நோய்வாய்ப்பட்டு இருப்பார்கள்.

விஷக் கர்மதோஷத்திற்கான பரிகாரம் என்ன?

* முதலில் நமது ஜாதகத்தில் விஷக் கர்ம தோஷமானது உள்ளது… அதனால்தான் பாதிப்புகள் உள்ளது என்ற நம்பிக்கை ஒருவருக்கு முழுமையாக வேண்டும்.
* இந்த தோஷத்தை குறைப்பதற்கு நல்ல அனுபவம் கொண்ட ‘ஜோதிடரை’ அணுகுவது சிறப்பு. அந்த ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி கவனமாக தொடர்ச்சியாக பரிகாரங்கள் செய்யப்பட்டால்தான் இந்த ‘தோஷம்’ குறையும்.
* குலதெய்வத்தை தேடி முறையாக வழிபாடு செய்தல் முக்கியமாகும்.
* வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு மரியாதை செய்தல் அவசியம். அதாவது தர்ப்பணம், சிரார்த்தங்களை முறையாக ெகாடுத்தல் அவசியம்.

 

Tags :
× RELATED மங்கள சின்னத்தின் சூட்சும ரகசியங்கள்