பள்ளி சுவரில் ஓவியம் அசத்திய மாணவர்கள்

சாயல்குடி பிப்.16: சின்னஏர்வாடி, எம்.கரிசல்குளம் அரசு பள்ளி சுற்றுச்சுவர்களில் மாணவர்கள் ஓவியங்களை வரைந்து அசத்தினர். கடலாடி ஒன்றியம், சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுவர் சித்திரம் வரையும் போட்டி நடந்தது.  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவரில்  மரம் நடுதல், மழைநீர் சேமிப்பு, கொரோனா விழிப்புணர்வு, சுற்றுபுறம் தூய்மை, இயற்கை வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு படங்கள் மற்றும் பாரதியார், அப்துல்கலாம் போன்ற தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தினர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை சரண்யா வரவேற்றார். பேட் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராம்கி, அபிராமி, மகேஸ்வரி கலந்து கொண்டனர்.

இதேபோன்று எம்.கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுவர்களில் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் வீரமாளி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டித்தேவர், கூட்டுறவு சங்க தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். ஆசிரியை விமலிட்டா வரவேற்றார். ஆசிரியை கலைச்செல்வி, பிரின்சிலியா, ஜெரோபிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: