- ஆதிமுகா
- பாஜா
- தவெகா
- விஜய்
- சென்னை
- பஜாஜ்
- பேட்டல் பாயிண்ட் ஷெராடன் ரி
- புஞ்சேரி ஈஸ்ட் கோஸ்ட் ரோட்
- மாமல்லபுரத்தில்
- தமிழ்நாடு வெற்றி கிளப்
- ரமலான்
சென்னை: அதிமுக, பாஜவுடன் கூட்டணி இல்லை. தவெக தனித்து போட்டியிடும், என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே, பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள போர்-பாயின்ட் ஷெரட்டான் ரிசார்ட்டில், நேற்று மாலை தமிழக வெற்றி கழகம் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, முன்கூட்டியே தமிழக வெற்றி கழகம் சார்பில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உரிய அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அழைப்பிதழுடன் வந்த இசுலாமிய சகோதர, சகோதரிகள் தீவிர சோதனைக்கு பிறகே நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், மாலை 6.20 மணியளவில் விழா அரங்கிற்கு வந்தார். பின்னர், இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்த விஜய், தொழுகை மேற்கொண்டார். நோன்பு கஞ்சியையும் அருந்தினார். நிகழ்ச்சியில், சுமார் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். விஜய்க்கு இஸ்லாமியர்கள் வெள்ளி முலாம் பூசிய தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட மெக்காவின் நினைவு சின்னத்தையும், குரான் புத்தங்களையும் நினைவு பரிசாக வழங்கினர்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய விஜய், ‘நாம அரசியலுக்கு வந்ததிலிருந்து நம்மை அந்த டீம்.. இந்த டீம்..னு வதந்தி பரவுது. என் மீது அவதூறு பரப்பலாம்னு ட்ரை பண்ணி எதுவும் ஒர்க் அவுட் ஆகல. சோ, கடைசில என்னதான் இந்த விஜய்யை பண்ணலாம் அப்படின்னு நினைக்கும் போது தான் இந்த கூட்டணி, அந்த கூட்டணி சேர போறாரு அப்படின்னு பொய்யான பிரசாரம் செய்றாங்க.
இந்த செய்தி எல்லாம் கேட்டு நீங்க கன்பியூஸ் ஆகி இருப்பீங்க. நாம் எப்பவுமே மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கோம். மதசார்பற்ற சமூக நீதி என்ற அந்த நிலைப்பாட்டில் சமரசம் வச்சுக்க மாட்டோம். நம்மளுடைய தலைமையில் தான் ஆட்சி அப்படி என்பதில் எப்பவுமே உறுதியா இருக்கிறோம். அரசியலில் எந்த விதமான எந்த சமரசமும் வெச்சுக்க போறது இல்ல. அந்த பேச்சுவார்த்தை கிடையாது சரிங்களா. யார் என்ன அவதூறு பரப்பினாலும் தயவு செஞ்சு அதை நம்பாதீங்க. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நிச்சயமா வெற்றி அடைய முடியும். இன்று இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகள். உறுதியாக இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.
இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இசுலாமிய சகோதரர்களை நீண்ட நேரமாக பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், இஸ்லாமியர்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்றனர். அப்போது, சிலர் தடுப்புகளை தள்ளி விட்டு முண்டியடித்து ஓடினர். இதனால், இஸ்லாமியர்கள் மற்றும் பவுன்சர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கையில் அழைப்பிதழோடு நீண்ட நேரமாக வரிசையில் நின்ற இஸ்லாமிய சகோதரர்கள் அங்குள்ள தடுப்புகளை தாண்டி எகிறி குதித்து முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
