×

முதல்வர் வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் நிமிர்ந்து நிற்கிறது திமுகவிற்கு ஓட்டு போட்டதே கிடையாது முதல்முறையாக வாக்களிக்க போகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை வியந்து பாராட்டும் நபரின் வீடியோ வைரல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களையும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் பாராட்டி பொதுஜனம் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை திமுகவிற்கு வாக்களிக்காதவர்களும் இந்த ஆட்சியின் சாதனைகளை பார்த்து வாக்களிக்க முன்வருவதை இந்த வீடியோ வெளிக்காட்டுகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில் பேசும் நபர், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளார். இந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரத்து செய்ய வேண்டும் என நினைத்துக் கையெழுத்திட்டால் கூட, மிகப்பெரிய பயம் ஏற்படும். ஒரு திட்டத்தை நிறுத்தினால் கூட தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்,’’ என அவர் அந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விவரிக்கிறார். மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி, திட்டங்களை செயல்படுத்துவதாக கூறியதை சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை என்பதை பாராட்டினார். ‘‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து வருகிறது.

இவ்வளவு நெருக்கடிகள் மற்றும் வரிச்சுமைகளை தாண்டி, ஒரு ‘தற்சார்பு பொருளாதார நிபுணராக’ இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2வது இடத்திற்கு உயர்த்தியுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் வளர்ச்சியில் கடைக்கோடியில் இருந்த தமிழ்நாடு, இன்று முதல்வரின் சீரிய நடவடிக்கைகளால் மகளிர் பாதுகாப்பு, கல்வி என அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி ஒரு மிகப்பெரிய மேஜிக்,’’ என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

அந்த வீடியோவின் முத்தாய்ப்பாக, ‘‘எனது வாழ்நாளில் நான் இதுவரை திமுகவிற்கு ஓட்டு போட்டதே கிடையாது. ஆனால், இந்த ஆட்சியின் திட்டங்களையும் வளர்ச்சியையும் பார்த்து, எனது வாழ்நாளில் முதல்முறையாக திமுகவிற்கு ஓட்டுப் போடப் போகிறேன்,’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றியுள்ளார் என்பதற்கு இந்த காணொளியே சான்று என நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,Pradhan Mantri ,K. ,Stalin ,Chennai ,Stallin ,Dimuq ,
× RELATED அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு: தொடரும்...