- பிரேமலதா
- சென்னை
- பிரேமலதா விஜயகாந்த்
- Temutika
- பொதுச்செயலர்
- பிரேமலத விஜயகாந்த்
- சென்னை சாலிகிராமம் வீடு
சென்னை: பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை நிறுத்தாவிட்டால், மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பேன், என பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது 60வது பிறந்த நாளையொட்டி, சென்னை சாலிகிராமம் இல்லத்தில் கேக் வெட்டி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாழ்த்துகளை பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மிக விரைவில் முடியும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் கூறினார். அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் பெண்களை ஒன்றிணைத்து மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுப்பேன்.
பெண்கள் குடும்பத்தின் ஆணிவேர், அவர்களை இழிவுபடுத்துவது, கைதட்டி சிரிப்பது யாராக இருந்தாலும், எந்த கூட்டமாக இருந்தாலும் கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்பது அவர்களின் உரிமை. கூட்டணி பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. மிக விரைவில் தொகுதி பங்கீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அதைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
