- திமுக
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- DMK கூட்டணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடித்துள்்ளது. இந்த தேர்தலில், திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது.
திமுகவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விட தற்போது திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை மட்டுமே ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு கட்சிக்கு குறைவான தொகுதியை ஒதுக்கியது. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுகவும், தங்களுக்கு கூடுதலான தொகுதிகள் வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அழுத்தம் தெரிவித்து வந்தது.
இதுவரை திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே 4 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்தது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் 6க்கும் அதிகமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. புதிய கட்சிகள் இணைந்திருப்பதால், கூட்டணி கட்சிகள் சற்று விட்டுக்கொடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையிலான குழுவும், டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த முறையை விட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியண்ணன் மனப்பான்மையில் திமுக ஒருபோதும் நடந்தது இல்லை. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக நிர்பந்திக்கவில்லை. கட்டளையிடவில்லை. அழுத்தம் தரவில்லை. மாறாக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், பாஜவையும் அதன் கூட்டணியையும் வீழ்த்துவதே எங்கள் முதன்மை இலக்கு. இது சாதாரணமாக வந்து போகிற தேர்தல் அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பாஜ ஒரு பதற்ற அரசியலை சுமந்து வருகிறது. அமைதியான தமிழ் மண்ணை சீர்குலைக்க முயற்சிக்கிறது. அதனால் இம்முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை இலக்கு பாஜவை வீழ்த்துவது தான். சிபிஐ ஒரு நூற்றாண்டு கால கட்சி. தேர்தல் வெற்றி, தோல்வியை கடந்து நாட்டின்சமூக நல்லிணக்கத்திற்காக போராடி வந்துள்ளது. உழைக்கும் மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். அதற்காக தான் கூட்டணி அமைக்கிறோம்.
திமுகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த முறையை விடவும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரினோம். இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணியில் கூடுதலாக கட்சிகள் இணைந்திருப்பதால் நாங்கள் உட்பட பலரும் தொகுதிகளை குறைத்து கொள்கிறோம். எனவே நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனால் 6 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் நிறைவாக 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 5 இடங்கள் என்பது கட்சி நிர்வாகிகளை சோர்வடைய செய்யலாம். ஆனால் இதனை கடந்து எங்களுக்கு ஒரு அரசியல் இருக்கிறது.
பாஜவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அதற்காகவே அணி சேர்ந்திருக்கிறோம். திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வேண்டுகோள் தான் வைத்தனர். பரிசீலனை செய்ய வேண்டும் என்று தான் மு.க.ஸ்டாலினும் கேட்டுக் கொண்டார். திமுகவினரிடம் ஜனநாயகம் இருக்கிறது. சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கிருந்து வெளியேறி இருக்கும். ஆனால் திமுக ஒவ்வொரு முறையும் கட்டளையிடுகிற வகையில் பேசவில்லை. தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக எந்தவித நிர்பந்தமும் எங்களுக்கு தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாஜவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காகவே அணி சேர்ந்திருக்கிறோம். திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வேண்டுகோள் தான் வைத்தனர். பரிசீலனை செய்ய வேண்டும் என்று தான் மு.க.ஸ்டாலினும் கேட்டுக் கொண்டார். திமுகவினரிடம் ஜனநாயகம் இருக்கிறது’’
