×

சிபிஐயிடம் குடுமி மாட்டிகிச்சு; பாஜவின் பி டீம் இல்ல ஏ டீமே விஜய்தான்: நடிகை ஜுலி விமர்சனம்

 

நடிகை ஜூலி வெளியிட்டுள்ள காணொலியில் கூறியுள்ளதாவது: எல்லோரும் எல்பிஜி சிலிண்டர்களை வாங்கிவைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். வழக்கம்போல மோடி அரசு நமது வயிற்றில் அடிக்கிறது. ஆனால், இதைபற்றியெல்லாம் நம் அண்ணன் பேசமாட்டார். பேசினால் சிபிஐ அவரின் குடுமியைப்பிடித்து ஆட்டிவைத்து விடும். இப்போதுவரை பாஜவுடன் தவெக சேர்கிறதா இல்லையா என நிறையப் பேச்சுகள் வருகிறது.

நானே சொல்கிறேன் சேரமாட்டார்கள். ஏனென்றால் பாஜவை எதிர்ப்பது தமிழ்நாடு. பாஜவுக்கு எதிரானது என்ற கதையாடலைக் கட்டமைக்க வேண்டும். இப்போது நாங்கள் எங்களின் கொள்கை எதிரியுடன் சேரவில்லை, பாஜவுக்கு எதிரானவர்கள் எனச் சொல்லித்தானே ஓட்டு வாங்க முடியும். அதற்காக அவர்கள் செய்யும் ஜோக்குதான் இது. இதை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். மறக்காமல் 23ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் உங்களின் வாக்கைக் குத்திவிட்டு வந்துவிடுங்கள்.

அப்புறம், நமது ஃபேஸ்கட்பால் அண்ணா வேறு 40 நிமிடம் விசாரணை, சரக்கு பாட்டிலைத் தனியார் விமானத்தில் எடுத்துச் சென்று மாட்டிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். எதுக்குணே இது, கட்சிக்கு அசிங்கம் இல்லையா? சட்டம் தன் கடமையைச் செய்யும்; தீ பரவட்டும். பாஜவும் தவெகவும் இணையானது. பாஜதான் தவெக, தவெகதான் பாஜ. அண்ணா பாஜவின் பி டீம் இல்லை, ஏ டீமே அண்ணாதான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mattigichu ,CBI ,Bajaj ,Ila ,Julie ,Modi government ,CPI ,
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி...