×

ஹலோ கன்ட்ரோல் ரூமுங்களா? தவெகவுல எம்எல்ஏ சீட் தரமாட்டேங்குறாங்க என்னான்னு கேளுங்க: போதையில் 100க்கு போன் செய்து பெண் அலப்பறை

 

கோவை மாவட்ட காவல்துறை அவசர போலீஸ் உதவி எண் 100க்கு நேற்று முன்தினம் இரவு ஒரு செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், ‘தனக்கு தவெகவில் எம்எல்ஏ சீட் தர மறுக்கிறார்கள், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி புலம்பி தள்ளினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த பெண் பேசிய எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

அதில் அவர், கிணத்துக்கடவு அருகே சூலக்கல் பகுதி அரண்மனைபுதூரிலிருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். அந்த பெண்ணின் பெயர் தனலட்சுமி (45) என்பதும், அவர் போதையில் இருந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன்செய்து தவெகவில் எம்எல்ஏ சீட் தர மறுக்கிறார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புலம்பியதும் தெரியவந்தது.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ‘‘நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனது 2 மகள்களுக்கும் திருணமாகி விட்டது. நான் தவெகவில் சேர திட்டமிட்டு இருந்தேன். நான் போதையில் இருந்ததாக கூறுவது பொய்யான தகவல். போலீசார், இரவில் போனில் அழைத்து, இதுபோல் தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்’’ என்றார்.

Tags : Thaveka ,Coimbatore district police ,
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி...