- சேரன்மகாதேவி, கரிசுத்தமங்கலம்
- Veeravanallur
- சட்டமன்ற உறுப்பினர்
- இசக்கிசுப்பையா
- சேரன்மகாதேவி, பத்தமடை, வீரவநல்லூர்
- முய்சேகரன்
- சேரன்மகாதேவி பேரூராட்சி
- பத்தமடை பேரூராட்சி
- கரிசுத்தமங்கலம்…
வீரவநல்லூர், மார்ச்.17: சேரன்மகாதேவி, பத்தமடை, வீரவநல்லூரில் நடந்த ரூ.37.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்டப்பணிகள் துவக்க விழாவில் இசக்கிசுப்பையா எம்எல்ஏ பங்கேற்றார். சேரன்மகாதேவி பேரூராட்சி முனைசேகரன் குடியிருப்பு பகுதியில் ரூ.21.50 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடை கட்டிடம், பத்தமடை பேரூராட்சி கரிசூழ்ந்தமங்கலம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடை கட்டிடம், வீரவநல்லூர் பேரூராட்சி தெற்கு ரத வீதி மற்றும் அணைக்கரை விநாயகர் கோயில் தெரு பகுதியில் தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிமுக நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்து நலத்திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மாநில ஜெ. பேரவை துணை செயலாளர் சிவன்பாபு, ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகர செயலாளர்கள் சேரன்மகாதேவி வக்கீல் பழனிகுமார், பத்தமடை சீனிவாசன், வீரவநல்லூர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
