- சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
- புகல்
- சர்வதேச மகளிர் தினம்
- சென்னை புலால், கவாங்கரா
- கண்ணப்பசாமி நகர் ஸ்ரீலங்கா தமிழ் புனர்
- புஹல் கவாங்கரா
புழல், மார்ச் 14: சென்னை புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் இணைந்த அனைத்து மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, புழல் காவாங்கரையில் நேற்று நடந்தது. விழாவுக்கு மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் அம்மு மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு, 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், 23வது வட்ட திமுக முன்னாள் செயலாளர் புழல் சரவணன், மாதவரம் வடக்கு பகுதி திமுக பிரதிநிதி புழல் சிவக்குமார், 24வது வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சித்தார்த் திருநாவுக்கரசு, மகளிர் சுயஉதவி குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
