×

ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி நடிகை அனசுயா பரத்வாஜ் ஆபாச வீடியோ வெளியீடு: ஐதராபாத் வாலிபர் அதிரடி கைது

திருமலை: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை அனசுயா பரத்வாஜுக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஆபாசப் பதிவுகள் செய்யப்படுவதாக அவர் சைபராபாத் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்து, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலா பகுதியில் உள்ள ஜூதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்தனன்(30) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில் ஜனார்தனன் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலியின் இந்திராநகரில் வசித்துக்கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனசுயா பரத்வாஜுன் ஆபாச வீடியோ மற்றும் ஆபாசமான கருத்துக்களை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியிட்டு வைரலாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து ஜனார்தனனை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Anasuya Bhardwaj ,Hyderabad ,Tirumala ,Cyberabad Cyber Crime Police ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடி பேச்சு...