- கிழக்கு இமயமலை
- புது தில்லி
- நவ்னீத் சிங்
- இந்திய விலங்கியல் சங்கம்
- இசட்எஸ்ஐ
- கொல்கத்தா
- சந்தோஷ் சிங்
- ZSI மத்திய பிராந்திய மையம்
- ஜபல்பூர்
- யூஜிசி
- ஆராய்ச்சி
- சிருஷ்டி பட்டாச்சார்யா
புதுடெல்லி: கொல்கத்தாவின் இந்திய விலங்கியல் மையத்தைச்(இசட்எஸ்ஐ) சேர்ந்த நவ்னீத் சிங், ஜபல்பூரில் உள்ள இசட்எஸ்ஐ.யின் மத்திய மண்டல மையத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிங் மற்றும் யுஜிசி மூத்த ஆராய்ச்சியாளரான சிருஷ்டி பட்டாச்சார்யா ஆகிய விஞ்ஞானிகள் அறிவியல் வெளியீட்டில் இந்த இனத்தை முறையாக விவரித்து அடையாளம் கண்டுள்ளனர். இது குறித்து ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிக்கிமில் உள்ள கோலிதர் அருகே சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து கவுலோசெரா ஹாலோவாய் அடையாளம் காணப்பட்டது.மேற்கு வங்காளத்தின் பனிஜோராவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து அசுர பக்ஸா கண்டுபிடிக்கப்பட்டது. கவுலோசெரா ஹாலோவாய் மற்றும் அசுரா பக்ஸாவின் கண்டுபிடிப்பு இந்தியாவின் அந்துப்பூச்சி பல்லுயிர் பெருக்கத்தை ஆவணப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாகும். இமயமலை போன்ற பல்லுயிர் பெருக்கப் பகுதிகளில் தொடர்ச்சியான வகைபிரித்தல் முயற்சிகளின் அவசியத்தை இந்த வெற்றி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
