மும்பை: அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடியால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பதற்றத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் விலை சரிந்து சந்தை குறியீட்டு எண்கள் 2% விலை சரிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 74,564 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம்.
