×

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 சரிவு: வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பாராத வகையில் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு பவுன் தங்கம் விலை அதிரடியாக 1,200 ரூபாய் குறைந்து, நேற்று 1 லட்சத்து 19 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையானது. மீண்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் தங்கம் விலை வந்திருப்பது பொதுமக்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் நேற்று மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளிக்கு ஒரே நாளில் ரூ.10,000 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 சரிந்து ரூ.2லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கட்டுக்கடங்காமல் ஏறி வந்த தங்கம் விலையால், திருமணங்கள் மற்றும் இதர சுபகாரியங்களுக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்பத்தினர், தங்களது பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வீழ்ச்சி, பொருளாதார ரீதியாக ஒரு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது. இந்த விலை இறக்கம் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் நகை வாங்கும் கனவு மீண்டும் எளிதாகும் என நடுத்தர குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...