சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2-ந்தேதி முதல் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று (மார்ச்.12) தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று (மார்ச்.11) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச்.12) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,970க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
