சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,970க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
