நன்றி குங்குமம் டாக்டர்
நம் முன்னோர்கள் இயற்கை உணவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அந்த உணவுகளில் மொச்சையும் முக்கிய பங்காற்றியது. இது குளிர்காலங்களில் பச்சையாகவும், கோடைக் காலங்களில் காய்ந்த கொட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆக, ஆண்டு முழுவதும் மொச்சை கிடைக்கிறது. மொச்சைப் பயறு வறட்சியைத் தாங்கி வளரும் தாவரமாகும். மண் வளத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உள்ளது.
மொச்சைப் பயறின் அறிவியல் பெயர் lablab purpureus
ஊட்டச்சத்து மதிப்பு (100 கி)
ஆற்றல் – 340 – 350 கலோரி, இரும்புச் சத்து – 5-7 மி.கி.
புரதம் 20 -22 கிராம், மக்னீசியம் – 150 -180 மி.கி.
நார்ச்சத்து – 15 – 20 கிராம்,
பொட்டாசியம் – 900 – 1000 மி.கி.
கால்சியம் – 100- 120 மி.கி.
மொச்சைப் பயறின் உணவுப் பயன்கள்
உடல் வளர்ச்சி
மொச்சையில் உள்ள புரதம்
தசை வளர்ச்சிக்கு உதவும்
உடல் திசுக்களை சீரமைக்கும்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியம்.
செரிமான நலம்
நார்ச்சத்து
மலச்சிக்கலைத் தடுக்கும்
குடல் இயக்கத்தை சீராக்கும்
குடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்தும்.
ரத்தசோகையை தடுக்கும்
இரும்பு மற்றும் ஃபோலேட்
ஹீமோகுளோபின் அளவை
உயர்த்தும்
பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பயனுள்ளதாகும்.
இதய பாதுகாப்பு தரும்
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
இதய நோய் அபாயத்தை குறைக்கும்
சக்கரை நோய் கட்டுப்பாடு
மொச்சை மெதுவாக செரிமானமாகும். அதனால் ரத்த சர்க்கரை அளவு திடீர் உயர்வு ஏற்படாது.
டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும்.
உடல் எடை மேலாண்மை
நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும்.
அதிக உணவு உட்கொள்வதை குறைக்கும்.
இதய ஆரோக்கியம்: மொச்சையில் உள்ள சத்துக்கள் கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு: குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) கொண்டிருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க சிறந்தது.
நரம்பு மண்டலம் மற்றும் மூளை ஆரோக்கியம்: இதில் உள்ள ‘கோலின்’ (Choline) நினைவாற்றல், மனநிலை மற்றும் தசை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
புரதச் சத்து: இது அசைவ உணவுக்கு இணையான புரதத்தை வழங்குகிறது, எனவே சைவ உணவாளர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
பார்கின்சன் நோய் தடுப்பு: மொச்சையில் உள்ள ‘எல்டோபா’ (L-dopa) நரம்பு தளர்ச்சி மற்றும் பார்கின்சன் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
தினசரி பரிந்துரைக்கப்படும் அளவு
குழந்தைகள் – கால் முதல் அரை கப்
பெரியவர்கள் – அரை முதல் 1 கப்
முதியவர்கள் – அரை கப்
வாரத்திற்கு 2-3 முறை சேர்க்கலாம்.
சாப்பிடும் முறை
8-10 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நன்றாக வேக வைத்து பயன்படுத்த வேண்டும். அதனுடன் இஞ்சி, சீரகம், பெருங்காயம் சேர்த்தால் வாயு குறையும். அனைத்து வயதினருக்கும் முக்கியத்துவம் குழந்தைகள் உடல் மற்றும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்பு வலிமை பெறும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பெரியவர்கள்
தினசரி ஆற்றல் அதிகரிக்கும்
வேலை திறன் கூடும்.
மன நலம் மற்றும் உடல் நலம் பலம் பெறும்.
கர்ப்பிணிப் பெண்கள்
கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ரத்தசோகையை தடுக்கும்.
முதியவர்கள்தசை சிதைவு குறையும்.
செரிமான நலம்
சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு இருக்கும்.மொச்சைப் பயறு ஒரு சத்தான மலிவான ஆரோக்கியமான பாரம்பரிய உணவு. இது உடல் வளர்ச்சி, இதய நலம், சர்க்கரை கட்டுப்பாடு, ரத்தசோகை தடுப்பு, எடை மேலாண்மை போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
உணவு:மொச்சைப் பயறு குழம்பு, மொச்சைப் பயறு சுண்டல், கூட்டு, பொரியல் போன்ற பல சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டுக் காய்கறிகளில் முக்கிய இடம் பிடித்த இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்தக் கூடியது.
தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா
