×

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கடும் கண்டனம்!!

டெல்லி: அமெரிக்க இஸ்ரேலிய நண்பர்களை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்கவே ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலை சரியாக கண்டித்த மோடி அரசு, ஈரானின் உச்சத் தலைவரை படுகொலை செய்தது குறித்தும், ஈரான் மீதான தாக்குதல் குறித்தும் முற்றிலும் அமைதியாக உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்,

“ஈரான் அரசமைப்புச் சட்டத்தின் தலைலவரான அயதுல்லா கமேனியை பிப். 28-ல் 2026 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இதுகுறித்து பிரதமர் மௌனம் காக்கிறார்; வெளியுறவு அமைச்சரும் அமைதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்னும் இரங்கல் குறிப்புகூட இல்லை. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு இந்தியா அமைதி காக்கிறது.

இந்தாண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியாதான் தலைமை தாங்குகிறது. இந்த பிரிக்ஸ் நாடுகளில் ஈரானும் ஒரு பகுதி என்பதை இந்தியா நினைவில்கொள்ள வேண்டும். 2024 மே மாதத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமான முறையில் பலியானார். இதனைத் தொடர்ந்து, 2024 மே 21-ல் ஒரு நாள் துக்கத்துக்கு மோடி அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, 2024 ஜூலை 1 ஆம் தேதியில் நாடாளுமன்றம் கூடியபோது, இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது மட்டும் ஏன் தயக்கம்? ஏதோ ஒன்றில் சமரசம் செய்யப்பட்ட பிரதமர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நண்பருடன் பகையாவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்பதில் சந்தேகமேயில்லை” என்று கூறியுள்ளார்.

Tags : Congress ,Modi government ,Iran ,Delhi ,Middle Eastern ,
× RELATED கட்டாய மாதவிடாய் விடுப்புக் கோரிய...