×

பங்குச் சந்தை வீழ்ச்சி – ரூ.6 லட்சம் கோடி இழப்பு

 

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் சரிந்து 77,174க்கு வர்த்தகமாகி வருகிறது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.25% மேல் வீழ்ச்சி அடைந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 287 புள்ளிகள் சரிந்து 23,974 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : MUMBAI ,INDEX SENSEX ,Sensex ,Stock ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...