மக்காச்சோளம் ஏலம்

ஒட்டன்சத்திரம், பிப்.11: ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி புறவழிச்சாலையில் அமைந்துள்ள  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  நடைபெற்ற மக்காச்சோளம்  ஏலத்தில் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து  விவசாயிகள் கலந்து கொண்டனர். மக்காச்சோளம்  மூடை அதிகபட்சமாக ரூ.1400க்கும், குறைந்தபட்சமாக ரூ.1225க்கும் ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories: