மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வாகனமும் மற்றொரு காரும் மோதிய விபத்தில் பயிற்றுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பயிற்சிக்காக காரில் இருந்த நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
