×

அதிமுக சார்பில் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி

 

சென்னை: அதிமுக சார்பில் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை கழக செய்திக்குறிப்பில்; அதிமுக சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா அவர்களின் வழியில் இந்த ஆண்டும், அதிமுக சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி, வருகின்ற 15.3.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில், சென்னை, எழும்பூர், Faiz Mahal-ல் (Hotel Imperial Complex) இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : EDAPPADI PALANISAMI ,IFTAR FAST ,CHENNAI ,ADAMUKA ,H.E. ,Secretary General ,Iftar Lent ,Adimuka ,Akhatsi ,Supreme ,
× RELATED ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு...