சென்னை: தேர்தல் வந்தாலே தமிழ்நாட்டின் மீது மோடிக்கு பாசம் வந்துவிடும் என்று அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை பழனிசாமி கண்மூடித்தனமாக ஆதரித்தார். இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்கள் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காரணமாக இருந்தது மோடி அரசுதான். திருச்சியில் கபட வேடம் போட்டு விவசாயிகளின் நண்பனாக மோடி நடித்திருக்கிறார்.
