×

சசிகலாவை ராமதாஸ் சந்திச்சது தெரியாது: அன்புமணி சத்தியம்

திருச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலாவை ராமதாஸ் சந்தித்ததை பற்றி தனக்கு தெரியவில்லை. பீகார் நிலைமை தமிழ்நாட்டுக்கும் ஏற்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது வேடிக்கையாக உள்ளது. பீகார் வேறு, தமிழ்நாடு வேறு. தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் வருகிறதா என்று தெரியவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வலுவாக இருக்கிறது. யார் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உங்களிடம் சொல்வதற்கு அவசியமில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். முதலமைச்சர் வேட்பாளரும் அவர்தான். இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ramadoss ,Sasikala ,Anbumani Satyam ,PMK ,Anbumani Ramadoss ,Trichy ,Tamil Nadu ,Chief Minister ,Bihar ,
× RELATED சொல்லிட்டாங்க…