×

துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு

திருச்செங்கோடு, மார்ச் 12: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், குமார பாளையம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலுக்காக 1,500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் தொகுதியில் 13 வாக்குச்சாவடிகளும், சேந்தமங்கலத்தில் 30, நாமக்கல் 17, பரமத்தி வேலூர் 42, திருச்செங்கோடு 18, மற்றும் குமாரபாளையத்தில் 60 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 180 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலை அமைதியுடன் நடத்த, துணை ராணுவ படையினர் 30க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு வந்துள்ளனர்.

அவர்கள் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்தப்பேட்டை தனியார் பள்ளி, ஜங்ஷன், ஆனங்கூர் ரோடு, சூரியம்பாளையம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாவடி வழியாக லாரி உரிமையாளர்கள் சங்கம் பெட்ரோல் பங்க் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். பின்னர், கூட்டப்பள்ளி வாட்டர் டேங்க், பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து, கூட்டப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள், ராஜா கவுண்டம்பாளையம், திருச்செங்கோடு நகரில் 4 ரத வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும், 15 சிபிஆர்எப் படை முகாம்களை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் வர இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பள்ளிபாளையம்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவ படையின் ஒரு பிரிவினர் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் நேற்று 2வது நாளாக, பள்ளிபாளையம் பகுதியில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். வாக்குசாவடி மையங்கள் உள்ள ஆவாரங்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் அணி வகுப்பு நடத்தினர்.

Tags : Thiruchengode ,Namakkal district ,Rasipuram ,Senthamangalam ,Namakkal ,Paramathevellur ,Kumarapalayam ,
× RELATED ஊடக கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி