×

இசையும், நகையும் நிகழ்ச்சி

ராசிபுரம், மார்ச் 10: ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் இசையும், நகையும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நகைச்சுவையாளர், இசைக்கலைஞர் மற்றும் நடிகர் அலெக்சாண்டர் பாபு கலந்து கொண்டார். பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். இயக்குநர் அவந்தி நடராஜன் வரவேற்றார். விழாவில் பேசியவர்கள் கல்லூரியில் உங்களின் கல்வி, விளையாட்டு, கலைத்திறன்கள் அனைத்திலும் சமநிலையான வளர்ச்சியை உருவாக்கி, பாவை மாணவ, மாணவிகள் அமொிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகையுடன் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பயிற்சி மேடையாக கருதி, மீண்டும், மீண்டும் முயற்சித்து உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்றனர். விழாவில், கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் மணிசேகரன், செயலாளர் பழனிவேல், துணை செயலாளர் பழனிவேல், பொருளாளர் மருத்துவர் ராமகிருஷ்ணன், இயக்குநர்கள் (நிர்வாகம்) ராமசாமி, பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சதீஸ், சிறப்பு அழைப்பாளர்கள், நடுவர்கள், பாவை பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rasipuram ,Pavai ,Educational Institutions ,Alexander Babu ,Natarajan ,Pavai Educational Institutions ,
× RELATED ரூ.17 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை