×

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, மார்ச் 10: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலருக்கான ஆலோசனை கூட்டம், தேர்தல் அலுவலர் ஆர்டிஓ லெனின் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் கொண்டுவரும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எப்படி வகைப்படுத்தி பார்ப்பது என்பது குறித்து எடுத்துக்கூறினார். தேர்தல் அலுவலர்கள், தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruchengode ,Thiruchengode Panchayat Union ,RTO Lenin ,
× RELATED ரூ.17 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை