×

மன்னார்குடி அருகே பைங்காநாடு மாரியம்மன் கோயிலில் வெள்ளி கவசம் திருடியவர் கைது

 

மன்னார்குடி,மார்ச் 11: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாட்டில் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் அருள்பாலித்து வரும் அம்மனுக்கு அணிவிப்பதற்காக சுமார் 5 கிலோ எடையுள்ள வெள்ளிக்கவசம் இருந்து வந்தது. இக்கோயிலில் முருகானந்தம் (53) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை கோயிலின் பக்க வாட்டில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோயிலுக்குள் இருந்த மர பீரோவை உடைத்து அதிலிருந்த வெள்ளிக் கவசத்தை திருடி சென்றனர். இது குறித்து, கோயில் பூசாரி முருகானந்தம் திருமக்கோட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

Tags : Bainganadu Mariamman temple ,Mannargudi ,Maha ,Mariamman temple ,Bainganadu ,Tiruvarur ,Muruganandam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்