×

வானராங்குடி அரசு பள்ளி ஆண்டு விழா

 

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 11: தஞ்சாவூர் மாவட்டம் வானராங்குடி அரசு தொடக்கப் பள்ளியின் 101வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான ம.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி ஆண்டறிக்கை வாசித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஓய்வு பெற்ற உதவி ஆசிரியர் இளங்கோவன் மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் வளர்மதி ஆகியோர் பாராட்டப்பட்டனர். விழாவில் முன்னாள் மாணவர்களும், ஊராட்சி முன்னாள் தலைவர்களும், அரசுஅதிகாரிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கீதா நன்றி கூறினார்.

Tags : Vanarangudi Government School Annual Day ,Thirukattupally ,101st Annual Day ,Vanarangudi Government Primary School ,Thanjavur ,M. Rajendran ,Vasuki ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்