- ஆல்கட்டுவெளி அரசு பள்ளி
- முத்துப்பேட்டை
- ஆல்கட்டுவெளி அரசு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி
- கல்வி அதிகாரி
முத்துப்பேட்டை,மார்ச் 11: முத்துப்பேட்டை அருகே ஆள்காட்டவெளி அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது. முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டுவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவருமான தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கோட்டூர் வட்டாரக்கல்வி அலுவலர் ராமசாமி, முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தரன், தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் செல்வசிதம்பரம், ஆசிரிய பயிற்றுநர் பாரத்ராஜ், மேலாண்மை குழு தலைவி தேவினி, துணைத்தலைவர் லலிதா, முன்னாள் தலைமையாசிரியர் பாஸ்கரன், பேராசிரியர் பன்னீர்செல்வம், முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
