×

பள்ளிவாசல் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்

 

தஞ்சாவூர், மார்ச் 11: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை அரசால் ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள் ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Tags : Thanjavur ,Ulamas ,Tamil Nadu ,Priyanka Pankaj ,Ulamas and Staff Welfare Board ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்