திருச்சி, மார்ச் 11: அரசு பஸ் மோதி தொழிலாளி பலியான வழக்கில், பஸ்சை ஓட்டி வந்த டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (61). அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 7.10.2019 அன்று எடமலைபட்டிபுதுார் ரயில்வே எஸ்பி அலுவலகம் சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது கிராப்பட்டி புதுத்தெருவை சேர்ந்த சகாய லாரன்ஸ் என்ற தொழிலாளி, அந்த வழியாக டூவீலரில் வந்து கொண்டிருந்தார். கோவிந்தராஜ் அஜாக்ரதையாக ஓட்டிவந்த பஸ் சகாய லாரன்ஸ் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சகாய லாரன்ஸ், சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
