×

புதுக்கட்சி வரலாம் ஆனா விஜய்….? வாய் திறக்க மறுக்கும் நயினார்

திருச்சியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேஜ கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை (இன்று) நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாது. விரைவில் நாங்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவோம். அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும். விஜய்யை விசாரணைக்கு சிபிஐ அழைத்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்பு. அவற்றை இயக்க யாராலும் முடியாது. எங்கள் கூட்டணிக்கு புது கட்சிகள் வரலாம். ஆனால் விஜய் வருவது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது. தவெக கட்சியின் கொள்கை என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தி விட்டு கொள்கை எதிரி பாஜ என விஜய் கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால் அதற்கு என்ன அர்த்தம் என தெரியவில்லை. சீனி என எழுதி வைத்தால் மட்டும் இனிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

* தட்டுப்பாடுலாம் இல்ல…நானே சிலிண்டர் தர்றேன்
நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘நம் நாட்டில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் காஸ் டீலர்தான், எங்கு வேண்டுமோ அங்கு நான் காஸ் சிலிண்டரை தருகிறேன். ஓட்டல்களில் உணவுகளை குறைத்ததற்கும், சிலிண்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்றார்.

* பாஜவுடன் கூட்டணியா? விஜய்க்கு அமீர் கடும் எச்சரிக்கை
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பாஜவுடன் இணைவதற்கான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய்க்கு இயக்குனர் அமீர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) தவெக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை இணைக்க பாஜ சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் மூலமாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் அமீர், ‘சிபிஐ விசாரணைக்கு பயந்து என்டிஏ கூட்டணிக்கு போய்விடாதீர்கள் விஜய். அதோடு உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Vijay… ,Nainar ,BJP ,president ,Nainar Nagendran ,Trichy ,Teja alliance ,Panchapur, Trichy ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்