×

வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர் கணேஷ்குமார்

திருவனந்தபுரம்: கேரள போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் கணேஷ்குமார். இதற்கு முன்பு உம்மன் சாண்டி அமைச்சரவையிலும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். கேரளா காங்கிரஸ் (பி) நிறுவன தலைவரான மறைந்த பாலகிருஷ்ண பிள்ளையின் மகன் ஆவார். கடந்த 2001ம் ஆண்டு முதல் பத்தனாபுரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

100க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் கணேஷ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது முதல் மனைவி யாமினி தங்கச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். இதன்பிறகு கடந்த 2014ம் ஆண்டு பிந்து மேனன் என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இந்நிலையில் அமைச்சர் கணேஷ்குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் புகார் கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் கூறியது: கடந்த 2014ம் ஆண்டு எனக்கும், அமைச்சர் கணேஷ் குமாருக்கும் திருமணம் நடந்தது. கணேஷ் குமாருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே கடந்த 2019 முதல் 2 பேருக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு நான் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியபோது கணேஷ்குமாரை வீட்டுக்குள் வைத்து வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்தேன். அதை என்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதனால் கணேஷ் குமாரின் உதவியாளர்கள் என்னிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்தனர்.

அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லவும் விடவில்லை. உடனடியாக என்னுடைய உறவினரான பாஜ கவுன்சிலர் ஸ்ரீலேகாவை போனில் அழைத்து விவரத்தை கூறினேன். அவர் கூறியதின்படி போலீசில் புகார் புகார் செய்தேன். போலீசார் வீட்டுக்கு வந்தபோதிலும் என்னுடைய புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்று விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இடதுசாரி கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் கணேஷ் குமார் மீது அவரது மனைவி கூறிய செக்ஸ் புகார், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அமைச்சர் கணேஷ்குமாரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே உம்மன் சாண்டி மந்திரிசபையில் இவர் அமைச்சராக இருந்தபோது முதல் மனைவி யாமினி தங்கச்சியும் இதே போல ஒரு புகார் கூறினார். இதைத்தொடர்ந்து அப்போது கணேஷ்குமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தநிலையில் அமைச்சர் கணேஷ்குமார் தன்னுடைய மனைவி பிந்து மேனனை போனில் அழைத்து மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிந்து மேனனும் உறுதி செய்துள்ளார். தன்னுடைய கணவர் கணேஷ்குமார் தன்னிடம் மன்னிப்பு கேட்டுள்ளதால் இந்தப் பிரச்சினையை இதோடு விட்டுவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

Tags : Kerala ,Minister ,Ganesh Kumar ,Thiruvananthapuram ,Transport Minister ,Oommen Chandy ,Balakrishna Pillai ,Kerala Congress ,P ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி:...