×

விபத்தில் முதியவர் பலி

 

விருத்தாசலம், மார்ச் 9: விருத்தாசலம் திரு வி.க நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(52). இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தற்போது புதுகூரைப்பேட்டையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரவி கடந்த 4ம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் -பொன்னேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Virudhachalam ,Ravi ,Murugan Kovil Street, Thiru V.K. Nagar ,Saraswathi ,Pudukkooripetta ,Ravi… ,
× RELATED ஆரோவில் நிலமோசடியை தடுத்து...