- நெய்வேலி
- மயாகிருஷ்ணன்
- சந்தோஷ்
- மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி
- சலீம்
- முகமது நெஃபல் அலி
- மந்தாரக்குப்பம் மசூதி
நெய்வேலி, மார்ச் 9: நெய்வேலி மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் சந்தோஷ்(20). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அதே பகுதியை சேர்ந்த சலீம் மகன் முகமது நெஃபல் அலி(18) என்பருடன் மந்தாரக்குப்பம் மசூதி எதிரே உள்ள சாலைகளில் வடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர், அப்போது திருச்சி ஓயக்லஸ் ரோடு முல்லை தெருவை சேர்ந்த இரும்பு வியாபாரி முஹம்மது ஜக்கரியா(62) என்பவர், மந்தாரக்குப்பம் தனியார் விடுதியில் தங்கி இருந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் சாலை குறுக்கே கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் மோதிக்கொண்டன.
தகவல் அறிந்த மந்தாரகுப்பம் போலீசார் மற்றும் பொதுமக்கள் சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், முகமது நெஃபல் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ், முஹம்மது ஜக்கரியா ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், முகமது ஜக்கரியா இறந்துவிட்டதாக என தெரிவித்தனர். சந்தோஷூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
