×

காட்டுமன்னார்கோவில் அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் பைக்கில் அலப்பறை செய்த போதை ஆசாமிகள்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 4: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குமராட்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. குமராட்சியில் இருந்து கிளம்பிய அரசு பேருந்தானது மெய்யாத்தூர் வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு பேருந்துக்கு முன்னால், ஒரே பைக்கில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஓட்டுனர் வழிவிடுமாறு ஹாரன் அடித்தபோது, அவர்கள் பேருந்து ஓட்டுனரை சைகையால் திட்டிக் கொண்டும், நீண்ட தூரம் பேருந்துக்கு வழி விடாமல் சென்று கொண்டு இருந்தனர். இது தொடர்பான வீடியோவை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kattumannarkovil ,Kumaratchi ,Cuddalore district ,Chidambaram ,Meiyathur ,
× RELATED வானூர் அருகே கிளியனூரில்...